கலசபாக்கம் அருகே எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக தொடங்கியது.
இன்று (02.04.2025) காலை கொடியேற்றத் திருவிழா நடத்தப்பட்டு, பக்தர்களின் ஆரவாரத்துடன் திருவிழா தொடங்கியது. இந்த புனித விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
பங்குனி உத்திரம், முருகப்பெருமானின் சிறப்பு திருவிழாக்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. நாளைய தினங்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் மற்றும் திருவிழா நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன.
அருள்மிகு முருகப்பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!





